இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை


இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2023 12:45 AM IST (Updated: 2 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை

கோயம்புத்தூர்

ஒண்டிப்புதூர்

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வம். வெல்டர். இவருடைய மனைவி லட்சுமி (வயது 25). சம்பவத்தன்று காலையில் லட்சுமி தனது மகனை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்தாமல் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை செல்வம் கண்டித்து உள்ளார். பின்னர் அவர், வேலைக்கு சென்று விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி வீட்டில் இருந்த திராவகத்தை (ஆசிட்) குடித்து மயங்கி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் செல்வம் விரைந்து வந்து லட்சுமியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story