இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x

அருமனை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை ேபாலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை ேபாலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

இளம்பெண்

அருமனை அருகே குஞ்சாலுவிளையை சேர்ந்தவர் அகஸ்டின், தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது29). இவர்களுக்கு அஸ்வினி (10), ஆஷிகா (8) என 2 குழந்தைகள் உள்ளனர். அகஸ்டின் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால், அவர் தனது அண்ணன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அகஸ்டின் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் புதிய வீட்டில் ஒருசில சீரமைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, மகேஸ்வரி தான் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று 'டீ' எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவரவில்லை.

மயங்கி கிடந்தார்

இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது மாடியில் உள்ள அறையில் மகேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

தந்தை போலீசில் புகார்

இந்த நிலையில் மகேஸ்வரியின் தந்தை மனோகரன் அருமனை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மகளின் சாவில் சந்ேதகம் உள்ளதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story