சிங்கப்பெருமாள் கோவிலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சிங்கப்பெருமாள் கோவிலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

சிங்கப்பெருமாள் கோவிலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

தகராறு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ராமச்சந்திரன் தெரு, தளபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி. இவர் அதே பகுதியில் பழ ஜூஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 24). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கலைமணி தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் நேற்று முன்தினம் காலை அவரை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் கலைமணி காலையில் சாப்பிடாமல் ஜூஸ் கடைக்கு சென்றார். இந்த நிலையில் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு கலைமணி வரும்போது மது குடித்து விட்டு வந்தார். இது குறித்து விஜயலட்சுமி கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

பின்னர் கலைமணி டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது கணவரை சாப்பிட வருமாறு விஜயலட்சுமி அழைத்தார். கணவர் கலைமணி சாப்பிட வராததால் ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அவரது கணவர் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து அவர் மேல சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.


Next Story