திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மேட்டுப்பாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண்

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவர் செக்கு எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா (25). இவர்களுக்கு 13.3.2022-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் சரண்யா தனது கணவரின் பெற்றோருடன் வசித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கடந்த 15 நாட்களாக சரண்யா மகாதேவபுரத்தில் உள்ள வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் கடையில் இருந்த அருண்குமாருக்கு தேநீர் கொடுத்து விட்டு சரண்யா வீட்டுக்கு திரும்பி சென்றார். பின்னர் இரவில் அக்கம்பக்கத்தினர் சரண்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை பார்த்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

உடனே அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்து விட்டார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சரண்யா மேட்டுப்பாளையத்தில் உள்ள இருசக்கர வாகன ஷோருமில் வேலைபார்த்த போது, அங்கு கஸ்டமராக வந்த அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது காதலாக மாறவே இருவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. திருமணமான 4 மாதத்தில் சரண்யா தற்கொலை செய்து கொண்டதால் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. பூமா விசாரணை மேற்கொண்டார். கணவர் அருண்குமார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பின்னரே சரண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம் தெரிய வரும்.


Next Story