சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியை உளுந்தூர்பேட்டையை அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தன் மகன் அஸ்வின்குமார்(வயது 27) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், அவரை கடத்தி சென்ற அஸ்வின்குமாரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை மீட்ட போலீசார் அவரை கடத்தி சென்ற அஸ்வின்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


Next Story