விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 17). அதே ஊரை சேர்ந்தவர் ஆகாஷ் (16). இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆத்தூர் அருகே உள்ள கூடமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார்கள். அப்போது கிருஷ்ணாபுரம் மாருதி நகர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ஹரிகரன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story