திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்கள்


திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்கள்
x

நத்தம் அருகே கோவில் திருவிழாவில் இளைஞர்கள் கழுமரம் ஏறினர்

திண்டுக்கல்

செந்துறை:

நத்தம் அருகே மணக்காட்டூர் மேற்குப்பட்டியில் முத்தாலம்மன், அய்யனார் கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவில் மேள, தாளத்துடன் அம்மன் மின்ரத ஊர்வலம் நடந்தது. பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல் நடந்தது. இதற்காக 80 அடி உயரம் கொண்ட பிரத்யேக மரம் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் வளாக பகுதியில் நடப்பட்டது. அதையடுத்து பொதுமக்களின் ஆரவார கோஷத்துடன் இளைஞர்கள் ஆர்வமுடன் கழுமரம் ஏறினர். இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story