ரெயிலில் அடிபட்டு இளம் பெண் பலி
வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு இளம் பெண் பலியானார்.
ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே இளம்பெண் ஒருவர் ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இறந்துகிடந்த பெண் வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத், பள்ளிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சவுந்்தரராஜன் என்பவரின் மகள் அஸ்வினி (வயது 29) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதமாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.