கடலூர் முதுநகரில்இளம்பெண் மானபங்கம்; டிரைவர் கைது

கடலூர் முதுநகரில் இளம்பெண் மானபங்கம் செய்த டிரைவர் கைது செய்ய்பட்டாா்.
கடலூர்
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் வசந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி சரண்யா (வயது 34). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான செந்தில் (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்தோணிராஜ், தனது மனைவியை கண்டித்தார். இதையடுத்து சரண்யா, செந்திலிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா, சலங்கை நகர் காளி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில் அவரை வழிமறித்து ஆபாசமாக திட்டி, மானபங்க படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






