மோகனூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி


மோகனூர் அருகே  மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

மோகனூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள லத்துவாடி மேற்கு அருந்ததியர் தெருைவ சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் முருகவேல் (வயது 22). முட்டை கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகவேல் வீட்டின் அருகே நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முருகவேல் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய தம்பி கந்தசாமி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடி வருகின்றனர்.


Next Story