பணம் பறித்த வாலிபர் கைது
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
திருவையாறு;
திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி மாதாகோவில் தெருவை சேர்ந்தவா் சகாயராஜ்(வயது35). இவர் தஞ்சைக்கு வேலை தொடா்பாக சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரிக்கு வந்து கொண்டிருந்தார். அம்மன்பேட்டை வெட்டாற்று பாலம் அருகே வந்த போது அம்மன்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் பவித்ரன் (23) சகாயராஜ் மோட்டார் சைக்கிளை மறித்து லிப்ட் கேட்பது போல நடித்தார். இதனால் சகாயராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது பவித்ரன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி சகாயராஜை மிரட்டி அவர் பையில் வைத்திருந்த ரூ.250 -ஐ பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டார்.இது குறித்து சகாயராஜ் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து பவித்ரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story