குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புகால்வாய் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் சூர்யா (வயது20). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சூர்யாவை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story