வங்கி அதிகாரியை தாக்கிய வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் வங்கி அதிகாரியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் பட்டு கண்ணன் (வயது 52). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அந்த தொகைக்கான வட்டியை அவர் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வங்கி உதவி மேலாளரான அம்பையை சேர்ந்த முத்துராமலிங்கம் (25) என்பவர், வங்கி ஊழியர்களுடன் பட்டுகண்ணன் வீட்டுக்கு சென்று வட்டியை கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டுகண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துராமலிங்கத்தை தாக்கியும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டுகண்ணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story