சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
கடலூர் முதுநகரில் சிறுவனை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்
கடலூர் முதுநகர்
கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், மணக்குப்பத்தை சேர்ந்த முருகன் மகன் எழில்வேந்தன், கலையரசன் ஆகியோருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று 17 வயது சிறுவன் சுத்துக்குளம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த எழில்வேந்தன், கலையரசன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக சிறுவனை திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, எழில்வேந்தனை (வயது 23) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story