பொதுமக்களை தாக்கியதாக பிடிபட்ட வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
பொதுமக்களை தாக்கியதாக பிடிபட்ட வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வேலூர்
கே.வி.குப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் அருகில் கடந்த 16-ந் தேதி வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்து கொண்டு இருந்தார். இவர் பொதுமக்களை தாக்கியதாகவும், பதிலுக்கு பொதுமக்கள் இவரைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு அவரை கம்பத்தில் கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள திம்மாவூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பிரதாப் (வயது 24) எனவும், மனநிலை பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது.
போலீசார் பிரதாப்பின் தந்தையை வரவழைத்து, பிரதாப்பை ஒப்படைத்தனர். நீண்ட நாட்களாகக் காணாமல் போன மகனை ஒப்படைத்த போலீசருக்கு பிரதாப்பின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story