கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 10:30 AM IST (Updated: 14 July 2023 10:30 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பெரியார் நகர் தேரோடும் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 41). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர், பழனிசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சைக்காக கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் மீது ஏற்கனவே வடக்கி பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story