முதியவரை தாக்கிய வாலிபர் கைது
முதியவரை தாக்கிய வாலிபர் கைது
ராமநாதபுரம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வசந்தநகரை சேர்ந்த முருகேசன் மகன் காமாட்சி (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி மிரட்டி கொண்டிருந்தாராம். இதனை அந்த வழியாக சென்ற கோவிந்தன் (60) எனபவர் காமாட்சியின் தந்தையிடம் விவரத்தை கூறி காமாட்சியை அழைத்து செல்லுமாறு கூறினாராம். இதனை கண்ட காமாட்சி என்னைபற்றி எப்படி என் அப்பாவிடம் கூறலாம் என்று கேட்டு கல்லை எடுத்து கோவிந்தனின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து காமாட்சியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story