தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

திருவாரூர்

முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிகுளம் முகைதீன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாதுஷா மகன் அப்துல் ரகுமான் (வயது30). இவர் அந்த பகுதி தெருவில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கிண்டல், கேலி செய்து வந்துள்ளார். இதனை கண்ட பள்ளி வாசல் தெருவை சேர்ந்த தொழிலாளி அன்வர் அலி (45) என்பவர் அப்துல் ரகுமான் வீட்டிற்கு சென்று இதுகுறித்து அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த அப்துல் ரகுமான் ஆத்திரத்தில் அன்வர் அலியை தாக்கினார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அன்வர் அலி புகார் செய்தார். அதன்பேரில் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story