தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மங்காரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 54), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திக்கணங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கே இடையூறாக நின்றவர்களிடம் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அந்தோணி தாஸ் (29), ராம்ஜி (28), தாஸ் (40) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தங்கத்தை அங்கு நின்றவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாசை கைது செய்தனர்.


Next Story