தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
மயிலாடுதுறையில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை திருவிழந்தூர் திருமஞ்சன வீதியைச் சேர்ந்தவர் தர்மதாஸ் (வயது 49)., திருவிழந்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மதியழகன் மகன் பிரகாஷ் (32).அதே பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் அஜய். இவர்கள் 3 பேரும் ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள மரவாடியில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று பிரகாசும், அஜயும் மரவாடியின் முன்பு அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தர்மதாஸ், நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முன்பு மது அருந்தலாமா, வேறு எங்காவது சென்று மது அருந்துங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாசும், அஜயும் சேர்ந்து உருட்டு கட்டையால் தர்மதாசை அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக அஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.