அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது


திருப்பத்தூர்

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து புதுமுகன் பகுதிக்கு சென்ற அரசு பஸ் மீண்டும் திருப்பத்தூரை நோக்கி வந்தபோது சேலம் கூட்ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மகன் காரல்மார்க்ஸ் (வயது 20), குடிபோதையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளார். இதில்பஸ்சின் பக்க கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினார்கள். யாருக்கும் காயம் ஏற்படவில்லை

இதுகுறித்து பஸ் கண்டக்டர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரல் மார்க்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story