கல்வராயன்மலையில் விளை நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் கைது


கல்வராயன்மலையில் விளை நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் விளை நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர்கள் வெள்ளிமலை சரவணன், இன்னாடு சந்தோஷ்குமார் மற்றும் வனத்துறையினர் கல்வராயன்மலையில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இதில் வெள்ளரிக்காடு வனப்பகுதியில் உள்ள விளைநிலத்தில் கஞ்சா செடி சாகுபடி செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 20 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை கரியாலூர் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா செடி பயிரிட்டதாக அதே ஊரை சேர்ந்த அழகேசன் மகன் எம்.ஜி.ஆர். (வயது 27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story