அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது


அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
x

ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே அயன்திருவாலீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (வயது 42). இவர் அயன்திருவாலீஸ்வரம் பிள்ளையார் கோவில் நடுத்தெரு அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த முப்புலிபாண்டி (22) என்பவர் அவதூறாக பேசியதை செல்லப்பாண்டியன் தட்டி கேட்டார். அவரை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் விசாரணை நடத்தி முப்புலிபாண்டியை கைது செய்தார்.


Next Story