அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது
x

அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

காரையூர் அருகே உள்ள கீழத்தானியம் கழனிவாய் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக காரையூர் போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் காரையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளிய விளாம்பட்டியை சேர்ந்த வீரைய்யா மகன் சங்கர் (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் மினி டிப்பரை பறிமுதல் செய்தனர்.


Next Story