தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2022 12:30 AM IST (Updated: 25 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை இடையர்பாளையம், எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35), தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலாண்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், பிரபாகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.400-யை பறித்தார். இதனால் பிரபாகரன் சத்தம் போட்டார்.

இதனைக்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கே.கே.புதூரை சேர்ந்த மதன்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மதன்குமார் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story