மனைவி, மாமனாரை சாதி பெயரை கூறி திட்டிய வாலிபர் கைது
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்த பெருமாள் மகள் கீர்த்திகா (வயது 23). இவர் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த கஜேந்திரன் (27) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தார. இந்த நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காதல் மனைவியை அவருடைய தாயார் வீட்டுக்கு விரட்டிய கஜேந்திரன் ஊர் சுற்றிக்கொண்டு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கஜேந்திரன் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிமன்றத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஜேந்திரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கீர்த்திகாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனது தந்தையுடன் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டனர். அப்போது அவர், கீர்த்திகா மற்றும் அவரது தந்தையை சாதி பெயரை கூறி திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கீர்த்திகா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.