நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது
வந்தவாசி அருகே நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கீழ்கொடுங்காலூர் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 11-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உறவினர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிறுதாமூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி அஜித்குமார் (வயது 24) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை அஜித்குமார் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போக்ேசா சட்டத்தின் கீழ் அஜித்குமாரை இன்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.