கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

விளாத்திகுளம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் தருவைகுளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்ததாண்டவம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் தினேஷ் (வயது 29) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் தினேசை கைது செய்து, 95 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story