சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

மயிலாடுதுறையில் சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை அய்யனார் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்ற வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிக்க முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மயிலாடுதுறை திருவிழந்தூர் ராஜா தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் ராம்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் சாராய விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.








Next Story