காரில் மண்எண்ணெய் கடத்திய வாலிபர் கைது


காரில் மண்எண்ணெய் கடத்திய வாலிபர் கைது
x

காரில் மண்எண்ணெய் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் ஆனைகுடி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 கேன்களில் 275 லிட்டர் மண்எண்ணெய் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் தாமோதரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story