காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
தூத்துக்குடியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவஞானபாண்டியன் தலைமையிலான போலீசார், புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியைச் சேர்ந்த காந்தி சங்கரை (வயது 32) போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்து சுமார் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story