தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது


தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம், கச்சிராயப்பாளையம் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

வாகன சோதனை

கள்ளக்குறிச்சி உட்கோட்ட குற்ற பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையிலான போலீசார் நேற்று காலை சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவில் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் போலீசாரை கண்டதும் திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பின்னால் துரத்தி சென்று மர்மநபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

தங்கசங்கிலி பறிப்பு

விசாரணையில் அவர் சின்னசேலம் அருகே வரதப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பிரசாந்த்(வயது 24), ஐ.டி.ஐ. படித்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 20-8-2021-ம் ஆண்டு இரவு சின்னசேலத்தை அடுத்த ராயப்பனூர் வி.கூட்டுரோடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மனைவி புவனேஸ்வரி(22) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது, இதேபோல் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் சூசைநகர், மேற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி ஆரோக்கியமேரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

கைது

இதையடுத்து பிரசாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 பவுன் நகைளை பறிமுதல் செய்தனர்.


Next Story