பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
பேராவூரணி பகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் ஈரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அதே உணவகத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவர் சப்ளையராக பணியாற்றினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டனின் நடவடிக்கை பிடிக்காததால் அப்பெண் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். மணிகண்டன் அவரை தொந்தரவு செய்யவே அப்பெண் சொந்த ஊருக்கு வந்து பேராவூரணி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனை அறிந்த மணிகண்டன் பேராவூரணிக்கு நேற்று முன்தினம் வந்து அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை மணிகண்டன் குத்த முயன்றபோது அதனை அப்பெண் தடுத்துள்ளார். இதில் அவருக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.






