சாராயம் பதுக்கி வைத்த வாலிபர் கைது


சாராயம் பதுக்கி வைத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பூதேரி கிராமத்தில் சாராயம் பதுக்கி வைத்த வாலிபர் கைது

விழுப்புரம்

பிரம்மதேசம்

ரகசிய தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பிரம்மதேசம் அருகே உள்ள கீழ்பூதேரி கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இளையசெல்வம்(வயது 27) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story