1½ பவுன் தங்க சங்கிலியை திருடிய வாலிபர் கைது


1½ பவுன் தங்க சங்கிலியை திருடிய வாலிபர் கைது
x

1½ பவுன் தங்க சங்கிலியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே போலம்பட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 28). இவர் நேற்று தோட்டத்திற்கு சென்ற நிலையில் அவரது மனைவி சிவகாமி வீட்டை பூட்டி விட்டு கோகுலகிருஷ்ணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை தோட்டத்தில் வேலை முடிந்து விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்க சங்கிலியை திருடியது இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ராஜபாண்டி (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராஜபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story