கோழி திருடிய வாலிபர் கைது


கோழி திருடிய வாலிபர் கைது
x

வீடு புகுந்து கோழி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

கூடலூர் 8-வது வார்டு விதைப்பண்ணை தெருவை சேர்ந்தவர் சிவானந்தன் (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அதிகாலை இவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கோழிகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவானந்தன், வீட்டில் உள்ள விளக்கை போட்டு பார்த்தார்.

அப்போது, கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (33) என்பவர் 3 கோழிகளை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சிவானந்தன் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார்.


Next Story