கள்ளக்குறிச்சியில் கோழிகள் திருடிய வாலிபர் கைது
கள்ளக்குறிச்சியில் கோழிகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் முத்துலட்சுமி என்பவர், கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை 5 மணிக்கு, முத்துலட்சுமி கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் முன்பு 6 இரும்பு கூண்டுகளில் இருந்த 195 கோழிகள் திருடுபோயிருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில் பதிவாகி இருந்த காரின் எண்ணின் அடிப்படையில் விசாரித்த போது,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கைகளத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி மகன் வேல்முருகன் (31) என்பவர், காரில் இரும்பு கூண்டுகளோடு கோழிகளை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.