பெண் போலீஸ் வீட்டில் திருடிய வாலிபர் கைது


பெண் போலீஸ் வீட்டில் திருடிய வாலிபர் கைது
x

ஜோலார்பேட்டையில் பெண் போலீஸ் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீசார் அண்ணான்டப்பட்டி கூட்டு ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றித் திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் வ.உ.சி தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 30) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் போலீஸ் நந்தினி என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் ஆரம், தாலி செயின் உள்ளிட்ட நகைகளை திருடியது ஒப்புக்கொண்டார். போலீஸ் குடியிருப்பிலேயே அதுவும் பட்டப்பகலில் புகுந்து இதில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 9 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர் மீது சேலம், திருப்பூர், தர்மபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story