கோவிலில் நகை-பணத்தை திருடிய வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே கோவிலில் நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கோவிலில் நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை-பணம் திருட்டு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு மெயின் ரோட்டில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 22-ந்தேதி இரவு மர்ம நபர், இந்த கோவிலின் பூட்டை உடைத்து
அம்மன் கழுத்தில் இருந்த பவுன் நகைகள் மற்றும் வெள்ளி நகைகள், உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி கமிட்டியை சேர்ந்த தண்டபாணி, திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்த அன்புச்செல்வன் மகன் பாலசிங்கம் (வயது 29) என்பதும், இவர் வீரமாகாளியம்மன் கோவிலில் நகை மற்றும் பணம் திருடியதும் தெரிய வந்தது.இதை தொடர்ந்து பாலசிங்கத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.