நகை திருடிய வாலிபர் கைது
பொள்ளாச்சி பகுதியில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகர பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மதுரையை சேர்ந்த மகேந்திரன் (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கோவை மத்திய சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மகேந்திரனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சி பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story