மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
x

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள சசிநகரை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 70). அச்சக அதிபரான இவருக்கு ஜான்சிராதா (60) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஜெயசங்கர் அச்சகத்துக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் ஜான்சிராதா தனியாக இருந்தார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்த விஸ்வநத்தம் கம்மவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் முத்துகணேஷ் (29) என்பவர், ஜான்சிராதா கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது ஜான்சிராதா சத்தம் போட்டதால், முத்துகணேஷ் தான் கொண்டு வந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்திவிட்டு நகையுடன் தப்பி சென்றார். இதுகுறித்து ஜெயசங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயசங்கர் வீட்டில் டி.வி. மாட்ட வந்த முத்துகணேஷ் வீட்டில் யாரும் இல்லாததையும், ஜான்சிராதா அதிக நகை அணிந்து இருப்பதையும் நோட்டம் விட்டுள்ளார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வந்து நகையை பறித்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் ஜான்சி ராதா, முத்துகணேஷ் குறித்து சரியாக அடையாளம் தெரிவித்ததால் போலீசார் உடனே முத்துகணேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.


Related Tags :
Next Story