மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
x

வந்தவாசி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70). இவர், சம்பவத்தன்று அந்த கிராமத்தில் நடைபெற்ற கூழ்வார்த்தல் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கன்னியம்மாளின் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மானாம்பதி கண்டிகையை சேர்ந்த அந்தோணிசாமி மகன் இக்னேசியஸ்விக்டர் (29) என்பவர் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story