மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள குரும்ப பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் தான் வேலை பார்க்கும் ஒரு கம்பெனி நிறுத்தி இருந்தார். இந்த மோட்டார் சைக்கிளை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள புலியம்பட்டி பகுதி எஸ்.களத்தூர் பொன்னுசாமி (வயது 29) என்பவர் திருடி கொண்டு தப்பி சென்றார்.

இதைக்கண்ட பழனிசாமியின் மனைவி மாரியாயி சத்தம் போட்டார். இதையடுத்து பழனிசாமி அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன், பொன்னுச்சாமியை துரத்தி சென்று பிடித்து பாலவிடுதி போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பொன்னுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
  • chat