மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்து 4 வாகனங்களை மீட்டனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்து 4 வாகனங்களை மீட்டனர்.

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அம்மாபாளையம் கூட்ரோடில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் அவரை கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆரணி அருகே பழங்காமூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 33) என்பதும் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து தமிழ்ச்செல்வன் வந்த மோட்டார்சைக்கிளையும் அவரது வீட்டில் மறைத்து வைத்து இருந்த மேலும் 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தமிழ்ச்செல்வனை கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி காவலில் வைத்தனர்.


Next Story