நெல்லிக்குப்பத்தில்மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


நெல்லிக்குப்பத்தில்மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையிலான போலீசார், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி, விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் நெல்லிக்குப்பம் திருக்கண்டீஸ்வரத்தை சேர்ந்த சித்தார்த்தன் (வயது 23) என்பதும், இவர் நெல்லிக்குப்பம் தனியார் ஆலை முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story