மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், நேற்று முன்தினம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளையகவுண்டனூர் பகுதியில் நடந்த எருதுவிடும் திருவிழாைவ பார்க்க தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். பூசாரிவட்டம் பகுதியில் சாலையோரம் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு விழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்ப மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தார். ஆனால், அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, மோட்டார்சைக்கிளை திருடியவர் அடையாளம் தெரிந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, திருப்பத்தூரை அடுத்த ஏரிக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர் (27) எனத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கனகராஜின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story