மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த 4-ந் தேதி திருட்டு போனது. இதுகுறித்து யுவராஜ் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை போலீசார் ராணிப்பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஊனை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் (20) என்பவரை பிடித்து விசாரித்தபோது, யுவராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story