மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

அரியமங்கலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி நடு கொண்டயம்பேட்டை அகிலா நகரை சேர்ந்த ஆல்ட்ரின் மகன் சம்பத் நாராயணன் (வயது 19) என்பரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. மேலும் அவர் அரியமங்கலம், பால்பண்ணை, சமயபுரம், நம்பர் நெ.1 டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story