போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது


போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
x

ஏழாயிரம்பண்ைண அருகே போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 35). வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இவர் ஏழாயிரம்பண்ணை பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தேனி மாவட்டம் சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நீதி (29) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் போலீஸ்காரர் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.



Related Tags :
Next Story