இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது


இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது
x

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது. இதனால், மருத்துவமனை காவல் பணியில் உள்ள ஊழியர்கள் வாடன திருட்டை தடுக்கும் வழியில் செயல்பட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர், பார்க்கிங் பகுதியில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை எடுக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மருத்துவ காவலாளி சரவணன் என்பவர் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், செல்வபுரம் பகுதியை சேர்ந்த காதர்அலி (29) என்பதும், இவர் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்த வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், அரசு மருத்துவமனையில் வாகன திருட்டில் இரண்டு, மூன்று குழுக்களை சேர்ந்த நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், முக்கியமான குழுவை சேர்ந்தவர்தான் காதர்அலி என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்த மருத்துவமனை செக்யூரிட்டியை பொதுமக்கள், போலீசார் பாராட்டினர்.


Next Story